ஏனைய சுவிஸ் செய்தி
பாகிஸ்தானில் பணயக் கைதியாயிருந்த செஞ்சிலுவைப் பணியாளர் படு கொலை செய்யப்பட்டார்
[ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012, 01:08.39 பி.ப GMT ]
பாகிஸ்தானில் ஜனவரி முதல் பணயக் கைதியாயிருந்த சுவிஸ்சின் செஞ்சிலுவைப் பணியாளரை மீட்க பணம் கொடுக்காததால் அவரைக் கொன்று அவர் உடலை பழத்தோட்டத்தில் வீசிவிட்டனர்.

ஞாயிறன்று அவரது உடலை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவர் உடலில் ஒரு துண்டுச் சீட்டு இருந்ததைக் கண்டனர். அதில் பணயத்தொகையை அளிக்காததால் அவர் கொல்லப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கலீல் ரஸ்ஜீத் டாலே(Khalil Rasjed Dale) என்பவர் பலுகிஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான குவெட்டாவில் ஒரு சுகாதாரத் திட்டத்தின் மேலாளராகப் பணிபுரிந்தார்.

அவரது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இப்பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ICRC என்ற செஞ்சிலுவை சர்வதேசக்குழு இந்தக் கொலையைக் “காட்டுமிராண்டித்தனமான செயல்” என்று விமர்சித்துள்ளது.

இதன் பொது இயக்குநர் யேவ்ஸ் டக்கார்டு(Yves Daccord) தனது அறிக்கையில் தாமும், பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கத்தாரும் இறந்து போன கலீலின் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கலீல் மிகவும் நம்பிக்கையான, அனுபவம் வாய்ந்த செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர், பல்வேறு மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். சோமாலியா, ஈராக் போன்ற நாடுகளில் செஞ்சிலுவைப்பணி ஆற்றினார் என்று அவரது தொண்டுள்ளத்தைப் பாராட்டினார்.

பலுகிஸ்தானும் வேறு சில மலைப்பகுதிகளும் ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தப் பகுதிகளில் அதிகாரம் செலுத்தும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் பணயக் கைதிகளை இங்கு பிடித்து வருகின்றனர். பெருந்தொகை கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தராத போது அவர்களை இரக்கமில்லாமல் கொன்று விடுகின்றனர்.

மார்ச் மாதம் தாலிபானில் ஒரு சுவிஸ் தம்பதியை எட்டு மாதம் அடைத்து வைத்து, ஒரு பெருந்தொகையைப் பெற்றுக் கொண்ட பின்னரே விடுதலை செய்தனர். இவர்களையும் கலீலை வைத்திருந்த பலுகிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் தான் வைத்திருந்தனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சரலாந்தில் வெப்பக்காற்றால் 4 பேர் மரணம்
மூத்த குடிமகன் சாலை விபத்தில் மரணம்
தமிழ் அழியவில்லை - நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு)
சுவிட்சலாந்து லுட்சன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு நிகழ்வு
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் தொழில் முனைவோர்கள்
ஜெனிவாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை
உலகின் விலையுயர்ந்த சாண்ட்விச் ஜெனிவாவில் விற்பனை
விமர்சையாக நடைபெற்ற சைக்கிள் போட்டியில் நோர்வே வீரர் வெற்றி
உலகின் பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சி சுவிஸ்ஸில் ஆரம்பம்
வெகு விமரிசையாக சுவிசில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல்
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்]
அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] []
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்]
ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] []
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்]
ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்]
தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]