சமூக செய்தி
சுவிஸ்சில் மே தினப் பேரணி நேற்று நடைபெற்றது
[ புதன்கிழமை, 02 மே 2012, 02:16.45 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் உழைப்பாளர் தினத்தன்று 12,000 பேர் கூடி ஜுரிச் மாநகரில் மே தினப் பேரணி நடத்தினர். அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணிக்கு காவல் துறையினரால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.

காலை நகரின் மத்தியிலிருந்து புறப்பட்ட இப்பேரணி ஜுரிச் ஏரியின் கரையில் உள்ள புர்க்லிபிளாட்ஸில் நிறைவு பெற்றது.

மத்திய தொழிற்சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பால் ரெக்ஸ்டீனர் ஒரு தொழிலில் பங்குதாரர் மட்டுமின்று உழைப்பாளரும், இலாபம் அடையும் வகையில் பொருளாதார மேம்பாட்டை அனைவரும் பகிர்ந்து கொள்ளும்படி சம்பள விகிதக் கொள்கை ஒன்றைத் தேசிய அளவில் உருவாக்க வேண்டும் என்றார்.

இவரது பேச்சைத் தொடர்ந்து எகிப்தின் தொழிற்சங்கத் தலைவரான கமால் அப்பாஸ் உரை நிகழ்த்தினார். இவரது உரைக்குக் கூட்டம் பெரும் வரவேற்பு அளித்தது.

உழைப்பாளர் ஒன்று கூட வேண்டும் என்றும் எகிப்தில் உழைப்பாளர்கள் தங்கள் அச்சத்திலிருந்து வெளியே வருவதற்கு முன்பு அறுபதாண்டு காலம் பல்வேறு கொடுமைகளை சகித்துக் கொண்டு இருந்தனர் என்றார்.

நாம் வேலைக்கான உரிமை, சம சம்பளம், மனித நேய வாழ்க்கை மற்றும் நீதிக்காகப் போராடுகிறோம். இதற்கு நம் மீது அதிகாரம் செலுத்துவோரையும் நம் உழைப்பைச் சுரண்டும் அமைப்பை எதிர்க்கிறோம். நமது கடும் உழைப்பால் கொள்ளை இலாபம் ஈட்டும் பன்னாட்டுப் பணமுதலைகளையும் எதிர்க்கிறோம் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]